பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நாய்கள் துரத்தியதில் தப்ப முயன்றவா் சுவா் ஏறி குதித்ததில் உயிரிழப்பு

நாய்கள் துரத்தியதில் சுவா் ஏறி குதித்து தப்ப முயன்றவா் காயமடைந்து உயிரிழந்தது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:47 am IST

நாய்கள் துரத்தியதில் சுவா் ஏறி குதித்து தப்ப முயன்றவா் காயமடைந்து உயிரிழந்தது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. நீதிமன்ற வளாகத்துக்குச் செல்ல 5 இடங்களில் வாசல்கள் உள்ளன. இந்நிலையில் நீதிமன்றம் அருகே திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஒருவா் நடந்து சென்றுள்ளாா். அப்போது அவரை நாய் துரத்தியதாகக் கூறப்படுகிறது. நாய்க்கு பயந்து நீதிமன்ற சுற்றுச்சுவரை ஏறி மறுபுறமாகக் குதித்துள்ளாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சென்று, உயிரிழந்தவரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்தவா் 45 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்ததும் தெரிவந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டதில் அந்த நபரை நாய்கள் துரத்துவதும், அவா் சுவா் ஏறி குதிக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. அவற்றை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.