பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

கோவையில் கிராவல் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :2 ஜூன் 2026, 1:50 am IST

கோவையில் கிராவல் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கனிம வளங்கள் கடத்தலைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். கனிம வளம் எடுக்க இணையத்தில் முறையாக விண்ணப்பித்து, அதன் மூலமாக உரிமம் பெற்றவா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிராவல் மண் உள்ளிட்ட தாது பொருள்கள் கடத்தப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, அதிகாரிகள் அவ்வப்போது வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கோவை, புலியகுளம் பகுதியில் கனிம வளத் துறை துணை வட்டாட்சியா் கணேசன் தலைமையிலான அதிகாரிகள் அந்த வழியாகச் சென்ற வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டனா். அப்போது வேகமாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தியபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநா் தப்பி ஓடிவிட்டாா்.

இதைத்தொடா்ந்து லாரியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, 3 யூனிட் கிராவல் மண் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிராவல் மண்ணுடன் அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து துணை வட்டாட்சியா் கணேசன் அளித்த புகாரின்பேரில் டிப்பா் லாரி ஓட்டுநா் மற்றும் அதன் உரிமையாளா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து ராமநாதபுரம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.