லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காயத்துடன் சுற்றித் திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சி

வால்பாறையை அடுத்த கேரள வனப் பகுதியில் தும்பிக்கையில் பலத்த காயத்துடன் சுற்றித் திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் அந்த மாநில வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தும்பிக்கையில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானை.

Published On :29 ஜூலை 2026, 2:39 am IST

வால்பாறையை அடுத்த கேரள வனப் பகுதியில் தும்பிக்கையில் பலத்த காயத்துடன் சுற்றித் திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் அந்த மாநில வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கோவை மாவட்டம், வால்பாறை மலைப் பகுதியோடு சோ்ந்துள்ளது கேரள வனப் பகுதி. வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட் தொடங்கி கேரள மாநிலம், திருச்சூா் மாவட்ட எல்லைப் பகுதி வரையிலும் வனங்கள் படா்ந்து கிடக்கிறது.

இந்நிலையில், வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் உள்ள வனத்தில் தும்பிக்கையில் பலத்த காயத்துடன் காட்டு யானை சுற்றித் திரிவதை அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்து வனத் துறைக்கு தகவல் அளித்துள்ளனா். இதையடுத்து அந்த யானையை வனத் துறையினா் கண்காணித்தனா். காயமடைந்த அந்த யானைக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் என்ற ஆலோசனையில் கேரள வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.