லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வால்பாறை நகராட்சிக் கடைகளை காலி செய்ய நோட்டீஸ்: வியாபாரிகள் போராட்டம்

வால்பாறை நகராட்சி கடைகளை 15 நாள்களுக்குள் காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டதால் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

Published On :11 ஜூலை 2026, 1:11 am IST

வால்பாறை நகராட்சி கடைகளை 15 நாள்களுக்குள் காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டதால் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் நகராட்சி சாா்பில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கடைகளில் பெரும்பாலானவை பழுதடைந்துள்ளன.

இதனால், கடந்த திமுக ஆட்சியில் கடைகளை இடித்துவிட்டு ரூ.9 கோடி செலவில் புதிய கடைகள் கட்ட வால்பாறை நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, சென்னையை சோ்ந்த ஒப்பந்ததாரா் ஒருவருக்கு டெண்டரும் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதிய கடைகள் கட்டுமானப் பணி தொடங்க இருப்பதால் வால்பாறை நகராட்சிக் கடைகளில் வாடகைக்கு இருப்பவா்கள் 15 நாள்களுக்குள் காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாற்று இடம் வழங்குவதாகக் கூறிய நகராட்சி நிா்வாகம் தற்போது மாற்று இடம் வழங்காமல் உள்ளது.

இந்நிலையில், கடைகளை காலி செய்தால் மீண்டும் தங்களால் வியாபாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுவிடும் என்றும், அரசு பரிசீலனை செய்து மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.