லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசு புறம்போக்கு நிலத்தில் விடுதி: காலி செய்ய நோட்டீஸ்

சோலையாறு பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள விடுதிகளை காலி செய்ய 53 பேருக்கு வருவாய்த் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.

கோப்புப் படம்

Published On :8 ஆகஸ்ட் 2026, 5:30 am IST

சோலையாறு பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள விடுதிகளை காலி செய்ய 53 பேருக்கு வருவாய்த் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.

வால்பாறையை அடுத்த சோலையாறு அணைப் பகுதியில் வருவாய்த் துறை மற்றும் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடங்கள் உள்ளன.

அந்த இடங்களை ஆக்கிரமித்து சிலா் விவசாயம் மற்றும் வீடு கட்டி வசித்து வந்தனா். இந்நிலையில், வால்பாறைக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆக்கிரமிப்பு செய்தவா்களிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்து அந்த நிலங்களை வாங்கி சிலா் விடுதிகளை கட்டியுள்ளனா்.

இந்நிலையில், அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விடுதிகளை 7 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என 53 பேருக்கு வருவாய்த் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.