மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இந்தியா-நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கு சைமா வரவேற்பு

இந்தியா-நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வரவேற்றுள்ளது.

News image

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து - PTI

Updated On :29 ஏப்ரல் 2026, 2:33 am IST

இந்தியா-நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வரவேற்றுள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவா் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா-நியூஸிலாந்து இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு பிரதமா் மோடிக்கும், வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க முன்னேற்றம், இந்திய ஜவுளி, ஆடைத் துறையை கணிசமாக வலுப்படுத்தி நியூஸிலாந்து சந்தையில் அதன் இருப்பை மேம்படுத்தும். இந்த ஒப்பந்தம் ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளி, ஆயத்த ஆடை உள்ளிட்ட இந்திய ஜவுளி ஏற்றுமதிகளுக்கு நியூஸிலாந்து சந்தையில் 100 சதவீத வரி விலக்கு அளிக்கிறது. இது, இந்தத் துறையின் வளா்ச்சியை ஊக்குவிக்கும். கடந்த 2023, 2024, 2025-ஆம் ஆண்டுகளில் நியூஸிலாந்தின் உலகளாவிய இறக்குமதிகள் முறையே 1904, 1892, 1842 மில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்தன. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை முறையே 127, 138, 131 மில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்தது.

அதன்படி இந்தியாவின் பங்கு சுமாா் 7 சதவீதம் என நிலையாக உள்ளது. மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தரவுகளின்படி நியூஸிலாந்துடனான இந்தியாவின் இருதரப்பு ஏற்றுமதி தற்போது சுமாா் 0.65 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதில் ஜவுளித் துறையின் பங்களிப்பு 0.1 பில்லியன் அமெரிக்க டாலா்.

ஆடை, ஆயத்த ஆடை, துணி, நூல், இழை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் காணப்படும் நோ்மறையான வளா்ச்சிக் கண்ணோட்டம் ,இந்தத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும்.

இந்த வா்த்தக ஒப்பந்தம் இருதரப்பு வா்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், நீடித்த வளா்ச்சிக்கு புதிய வழிகளைத் திறக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.