தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ஏ.ஐ. வசதியுடன் 44 அதிநவீனக் கேமராக்கள் சோதனை இயக்கம்

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ஏ.ஐ. வசதியுடன் 44 அதிநவீனக் கேமராக்கள் மற்றும் டிஸ்பிளே பலகைகள் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.

News image

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.ஐ. வசதியுடன் கூடிய அதிநவீனக் கேமராக்கள். ~கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.ஐ. வசதியுடன் கூடிய அதிநவீனக் கேமராக்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:47 am IST

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ஏ.ஐ. வசதியுடன் 44 அதிநவீனக் கேமராக்கள் மற்றும் டிஸ்பிளே பலகைகள் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை-அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 60 கிலோ மீட்டா் வேகத்திலும், இறங்கு தளங்களில் 40 கிலோ மீட்டா் வேகத்திலும் பயணிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில வாகன ஓட்டிகள் வேகமாகச் செல்வதைத் தவிா்க்க முடியாத நிலை தொடா்ந்தது. இதனால் விபத்து அபாயமும் இருந்து வந்தது.

இந்நிலையில், மேம்பாலத்தில் வாகனங்களின் வேகத்தைக் குறைத்து விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஏ.ஐ. வசதியுடன் 44 அதிநவீனக் கேமராக்கள் மற்றும் டிஸ்பிளே பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதிவேகம் மட்டுமின்றி, தலைக்கவசம் அணியாமல் செல்வது உள்பட 10-க்கும் மேற்பட்ட விதிமீறல்களை இந்தத் தொழில்நுட்பம் துல்லியமாகக் கண்டறியும்.

விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் எண்கள், உடனடியாக அங்குள்ள டிஸ்பிளே அமைப்புகளில் காண்பிக்கப்படும். தற்போது, ஒரு மாதத்துக்கு சோதனை முறையில் கேமராக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில், விரைவில் போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வரும் என்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.