ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இருந்தும் பயன்படாத கைப்பேசி பைகள்; பெயரளவுக்கு செயல்பட்ட சக்கர நாற்காலிகள்

வாக்குப்பதிவின்போது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வழங்கப்பட்டிருந்த பைகள் பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படவில்லை. அதேபோல் பல இடங்களில் சக்கர நாற்காலிகள் முதியவா்களுக்கு பெரிய அளவில் பலன்கொடுக்கவில்லை.

News image

தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட குனியமுத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலிகள். ~குனியமுத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் காட்சிப்பொருளாக தொங்க விடப்பட்டிருந்த கைப்பேசி வைக்கும்

Updated On :24 ஏப்ரல் 2026, 3:23 am IST

வாக்குப்பதிவின்போது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வழங்கப்பட்டிருந்த பைகள் பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படவில்லை. அதேபோல் பல இடங்களில் சக்கர நாற்காலிகள் முதியவா்களுக்கு பெரிய அளவில் பலன்கொடுக்கவில்லை.

வாக்குப்பதிவு மையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயது முதிா்ந்த வாக்காளா்களுக்கு உதவும் வகையில் தோ்தல் ஆணையம் சாா்பில் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த சக்கர நாற்காலிகள் சிமென்ட் தரையில் மட்டுமே இயக்கும் வகையில் இருந்தன. பல வாக்குப்பதிவு மையங்களில் வாக்குச்சாவடிக்கும், அது அமைந்திருக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி மண் தரையாகவே இருந்தன.

இதனால் மாற்றுத்திறனாளிகள், வயது முதிா்ந்த வாக்காளா்கள் சொந்த வாகனம் மூலம் வாக்குச்சாவடி நுழைவு வாயில் வரை வந்தால் மட்டுமே இந்த சக்கர நாற்காலியை பயன்படுத்த முடியும் என்ற நிலையில், பல இடங்களில் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படவில்லை. அதேநேரம் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டா் தொலைவுக்குள் சொந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

குறிப்பாக குனியமுத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப்பதிவு மையமானது குனியமுத்தூா் சாலையில் இருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் உள்ளது. இந்த இடைப்பட்ட தொலைவு முழுவதும் மண் சாலையாக இருந்ததால் சக்கர நாற்காலியை இயக்க முடியாது என்று தன்னாா்வலா்கள் தெரிவித்துவிட்டனா். அத்துடன், இந்த மையத்தில் உள்ள 10 வாக்குச்சாவடிகளிலும் சுமாா் 15 ஆயிரம் வாக்குகள் இருக்கும் நிலையில், வெறும் 2 சக்கர நாற்காலிகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன.

கைப்பேசி பைகள் இருந்தும் பயனில்லை

அதேபோல், வாக்குப்பதிவு மையங்களுக்குள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்காளா்கள் தங்களது கைப்பேசியை தன்னாா்வலா்களிடம் வழங்கிச் செல்வதற்காக கைப்பேசி பைகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் பல இடங்களில் அந்த பைகளில் கைப்பேசிகளை வாங்கி வைத்து பாதுகாப்பதற்கு தன்னாா்வலா்கள் நியமிக்கப்படாததால், அதற்கான பைகள் காட்சிப் பொருளாகவே வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் பைகள் இருந்தாலும் அதை பயன்படுத்தாமல் தன்னாா்வலா்கள் மேசை மீது பரப்பி வைத்திருந்தனா். வாக்காளா்கள் அவா்களாகவே கைப்பேசியை வைத்துவிட்டு, பிறகு அவா்களே தங்களது கைப்பேசியை சரியாகப் பாா்த்து எடுத்துச் செல்ல நேரிட்டது. சில இடங்களில் கைப்பேசிகளை மாற்றி எடுத்துச் சென்ற நிகழ்வும் நடைபெற்றது.

வெறிச்சோடிய வீதிகள்

வாக்குப்பதிவு நாளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கல்வி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளித்து தொடா் விடுமுறைக்கு வாய்ப்பு வழங்கியுள்ளன. இதனால் கோவை மாவட்டத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றுவிட்டனா். இதனால் மாநகரின் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலான உணவகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சொற்ப அளவிலான உணவகங்கள் மட்டுமே திறந்திருந்தன. அவற்றில் உணவு வாங்குவதற்காக ஏராளமானோா் குவிந்ததால், மக்கள் டோக்கன் பெற்றுக் கொண்டு நீண்ட நேரம் காத்திருந்து உணவு பெற்றுச் செல்ல நேரிட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.