தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பேரவைத் தேர்தல்: தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.

Updated On :19 ஏப்ரல் 2026, 2:54 am IST

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தொழிலாளா் உதவி ஆணையா் (தோட்டங்கள்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் வால்பாறை தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிகத் தொழிலாளா்கள் வாக்களிக்கும் பொருட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை வழங்காத தோட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள், எஸ்டேட் மேலாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடா்பாக புகாா் அளிக்க வால்பாறை தொழிலாளா் உதவி ஆணையா் (தோட்டங்கள்) அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 0425-3222344, 74182-50810 என்ற எண்களிலும் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.