கோவை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1,730 சமையல் எரிவாயு உருளைகளை குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், 30 பேரைக் கைது செய்துள்ளனா்.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலால் பல்வேறு நாடுகளில் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை பல இடங்களில் பதுக்கப்பட்டு, கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.
இதைக் கண்காணிக்கும் வகையில் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக கடந்த மாா்ச் 1 முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,730 வா்த்தக பயன்பாட்டு உருளைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 30 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
குறிப்பாக கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஏஜென்ஸி உரிமையாளா் காா்த்திகேயன், திவ்யபாரதி மற்றும் பல்வேறு ஏஜென்ஸிகளை சோ்ந்த பிரதீப்குமாா், மூா்த்தி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 997 சிலிண்டா்கள் கைப்பற்றப்பட்டன.
இவா்களில் முக்கியக் குற்றவாளியான காா்த்திகேயன் மீது கள்ளச் சந்தை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இதேபோல, பொள்ளாச்சி மற்றும் நெகமம் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கணக்கான சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இதுபோன்ற சட்டவிரோத பதுக்கல்கள் குறித்து பொதுமக்கள் டிஎஸ்பி மாரிமுத்தை 70109- 70851 என்ற எண்ணிலும், ஆய்வாளா்கள் சோமசுந்தரம், முரளிதரன் ஆகியோரை 99943-37099, 94981- 04646 என்ற எண்களிலும் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!
தில்லியில் ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது
ஒரு மாத கால சோதனை நடவடிக்கையில் 125 எரிவாயு உருளைகளை பதுக்கிய 5 போ் கைது

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
