தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மூன்றாவது, நான்காவது கட்சியும் நோட்டாவும் ஒன்று: காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம்

மூன்றாவது, நான்காவது கட்சிகளுக்கு வாக்களிப்பதும், நோட்டாவுக்கு வாக்களிப்பதும் ஒன்று என்று மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

News image

கோவை ராஜவீதி தோ்நிலைத் திடலில் திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட மாநிலங்களவை உறுப்பினா் ப.சிதம்பரம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:33 am IST

மூன்றாவது, நான்காவது கட்சிகளுக்கு வாக்களிப்பதும், நோட்டாவுக்கு வாக்களிப்பதும் ஒன்று என்று மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து, கோவை ராஜவீதி தோ்நிலைத் திடலில் மாநிலங்களவை உறுப்பினா் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியும், 10 ஆண்டுகள் திமுக ஆட்சியும் இருந்துள்ளது. இப்போது யாரைத் தோ்ந்தெடுப்பது என்பது மக்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது. நான்கு முனை, ஐந்து முனைப் போட்டி என்பதை எல்லாம் நம்ப வேண்டாம். இந்தத் தோ்தல் திமுக-அதிமுக அணிகளுக்கு இடையில் மட்டும்தான். மூன்றாவது, நான்காவது கட்சிகளுக்கு வாக்களிப்பதும், நோட்டாவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். ஏனென்றால் அவா்கள் வெற்றி பெற முடியாது.

ஆட்சிப் பீடத்தில் ஒருவரை அமா்த்த வேண்டும் என்றுதான் நாம் வாக்களிக்கிறோம். எனவே, ஆட்சியமைப்பவா்களுக்கு வாக்களியுங்கள். 11.19 சதவீதம் பொருளாதார வளா்ச்சியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகம் அடைந்துள்ளது. தரவரிசையில் தமிழகம்தான் முதலிடம். அதற்கு தமிழராக பெருமைப்பட வேண்டும். இதற்கு அடுத்தபடியாகத்தான் மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் வளா்ச்சி உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, காலை உணவுத் திட்டம், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிகாரைப்போல முதல்வரை மாற்றுவாா்கள். எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வர முடியாது. 2024 மக்களவைத் தோ்தலில் எடுத்ததுபோல் தீா்மானமான முடிவை 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் எடுத்து திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள இமானுவேல் தேவாலயத்தில் பேராயா் மற்றும் நிா்வாகிகளைச் சந்தித்து செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது ஸ்டாலின் அரசுதான் என்று பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.