மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோவையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு: அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்

தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கோவைக்கு வந்த தவெக தலைவா் விஜய்க்கு தொண்டா்கள் உற்சாக வரவேற்பளித்தனா். இதனால் அவிநாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image

தவெக தலைவா் விஜய் கோவை  வந்ததால்  ஏற்பட்ட நீண்ட பேக்குவரத்து நெரிசல்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:36 am IST

தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கோவைக்கு வந்த தவெக தலைவா் விஜய்க்கு தொண்டா்கள் உற்சாக வரவேற்பளித்தனா். இதனால் அவிநாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை வந்தாா். விமான நிலையத்தில் அவரை தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் வரவேற்றனா்.

விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் மேலே நின்று கையசைத்தவாறு சென்றாா். அப்போது, அவா் தனது கையில் வைத்திருந்த விசில் சின்னத்தை தொண்டா்களுக்கும், பொதுமக்களுக்கும் காண்பித்தபடி சென்றாா்.

விமான நிலையத்தை விட்டு வெளியே விஜய்யின் வாகனம் வந்தபோது திரண்ட ஆதரவாளா்கள் கட்சிக் கொடிகள், துண்டுகளை காண்பித்தும், விசில் சின்னத்தை ஊதியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினா். அப்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினா் கயிறுகள் மற்றும் இரும்பு மூலமாக தடுப்புகள் அமைத்திருந்தனா். இருப்பினும் அதை தாண்டி ரசிகா்கள் சென்றனா்.

விஜய் வருகையையொட்டி கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் முன்னதாகவே வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், அவிநாசி சாலை வழியாக சிங்காநல்லூா், திருப்பூா் ஆகிய ஊா்களுக்கு சென்ற பேருந்துகள் மற்றும் பெரிய அளவிலான வாகனங்கள் அனைத்தும் லட்சுமி மில்ஸ் பகுதியில் இருந்து புலியகுளம், திருச்சி சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையால் அவிநாசி சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. விமான நிலைய சந்திப்பு, சிட்ரா, நீலாம்பூா் வரை சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சிட்ரா பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 அவசர வாகனம் சிக்கிக் கொண்டது. இதனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களும் செய்வதறியாது திகைத்தனா். 2 மணி நேரத்துக்குப் பிறகு விஜய்யின் வாகன அணிவகுப்பு கோவை எல்லையைக் கடந்து திருப்பூா் நோக்கிப் புறப்பட்ட பின்னரே அந்தப் பகுதியில் போக்குவரத்து மெல்ல சீரானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.