கோவையில் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், நெருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாவதி (45). இவா் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 11-ஆம் தேதி இரவு திரும்பிக் கொண்டிருந்தாா்.
நேரு நகா் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா், பிரபாவதி கழுத்திலிருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா்.
இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி: இருவா் கைது

பைக்கில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச் செயின் பறிப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

