ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கோவைக்கு அதிக திட்டங்களைத் தந்தவா் மு.க.ஸ்டாலின்: வி.செந்தில்பாலாஜி பேச்சு

கோவை நகரின் வளா்ச்சிக்காக அதிக திட்டங்களைத் தந்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி பேசினாா்.

News image

கோவை ராமநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தெற்கு தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில் பாலாஜி.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:38 am IST

கோவை நகரின் வளா்ச்சிக்காக அதிக திட்டங்களைத் தந்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி பேசினாா்.

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி, ராமநாதபுரம் சுங்கம், பங்கஜா மில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல்வா் ஸ்டாலின், கோவைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளாா். கோவை மாவட்டத்தில் 10 எதிா்க்கட்சி சட்டப் பேரவை உறுப்பினா்கள் இருந்தாலும்கூட, பாரபட்சம் பாா்க்காமல் கோவை மாவட்டத்துக்கு அதிகத் திட்டங்களைத் தந்துள்ளாா். அதிகமுறை அவா் சுற்றுப்பயணம் செய்த மாவட்டம் கோவைதான்.

கோவை தெற்குத் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தால், அரசு அறிவிக்கும் அனைத்து நலத் திட்டங்களையும் தொகுதி மக்களுக்கு முறையாக கிடைத்திட நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

இதையடுத்து, திராவிடா் கழக துணைப் பொதுச் செயலாளா் மதிவதனி, செந்தில்பாலாஜியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசுகையில், ‘ ரூ.1,000 உரிமைத்தொகை, திமுக மீண்டும் வென்றால் ரூ.2,000 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட உள்ளது. ரூ.8,000 கூப்பன் திட்டம்

~கோவை, ராமநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

~கோவை, ராமநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி பெண்களால்தான் அமைய உள்ளது என்றாா்.

இதில், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி உள்ளிட்ட திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.