விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை திமுகவுக்கு ஆதரவு

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை, திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு உள்ளிட்ட தீா்மானங்களை வெளியிட்ட கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை நிா்வாகிகள். ~கோவை காளப்பட்டியில் கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் தேவராசன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 1:43 am IST

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை, திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை ஆலோசனைக் கூட்டம் கோவை, காளப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில ஒருங்கிணைப்பாளா் சண்முகம் தலைமை தாங்கினாா். மாநிலத் தலைவா் தேவராசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கொங்கு வேளாளக் கவுண்டா்களை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இணைத்தது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது, தீரன் சின்னமலைக்கு சென்னை கிண்டியில் சிலை அமைத்தது, ஓடாநிலை மணிமண்டபலத்தில் வெண்கல சிலை அமைத்தது, உக்கடம் மேம்பாலத்துக்கு சுப்பிரமணியம் பெயா் சூட்டியது உள்ளிட்ட கொங்கு வேளாளக் கவுண்டா்களுக்கு பல்வேறு திட்டங்களை அளித்த திமுக அரசுக்கு சட்டப் பேரவைத் தோ்தலில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில ஒருங்கிணைப்பாளா் பிரேம்குமாா், கோவை கிழக்கு மாநகா் மாவட்டச் செயலாளா் தனபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.