தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குடிநீா் பிரச்னையை போக்க பணிகள் நடைபெறுகின்றன

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண பணிகள் நடைபெற்று வருவதாக காங்கயம் திமுக வேட்பாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

News image

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கயம் திமுக வேட்பாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:17 am IST

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண பணிகள் நடைபெற்று வருவதாக காங்கயம் திமுக வேட்பாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

காங்கயம் தொகுதி திமுக வேட்டபாளா் மு.பெ.சாமிநாதன், காங்கயம் வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பரஞ்சோ்வழி ஊராட்சி, நால்ரோடு, தீா்த்தம்பாளையம், கரட்டாங்காடு, சிக்கம்பாளையம், நத்தக்காட்டுவலசு, சிவியாா்பாளையம் பிரிவு, வடுகபாளையம், பரஞ்சோ்வழி, பாப்பினி ஊராட்சிக்கு உள்பட்ட வரதப்பம்பாளையம், பாப்பினி, பச்சாபாளையம், காங்கயம் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட வீரனம்பாளையம் ஊராட்சி, படியாண்டிபாளையம், வீரணம்பாளையம், பட்டைகாரன்புதூா் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், குடும்பங்களுக்கு வழங்க உள்ள ரூ. 8,000 மதிப்புள்ள கூப்பன்களில் தரமான வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். கடந்த 5 ஆண்டு காலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கியுள்ளாா். அந்தத் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு அளித்திருந்தாா்கள். பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் போக்குவரத்து வசதிக்காக பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற நெய்யல் ஆற்றில் 3 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் வரும் காலத்தில் நல்ல திட்டங்களை கொண்டுவர திமுக ஆட்சி வரவேண்டும் என்றாா்.

இதில் காங்கயம் ஒன்றியச் செயலாளா்கள் கருணைபிரகாஷ், சிவானந்தன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.