ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வேலூா் மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளா்கள்

வேலூா் மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளா்கள்...

News image

வேலூா் மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளா்கள்

Updated On :29 மார்ச் 2026, 2:28 am IST

அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் வி.ராமு (காட்பாடி, எஸ்.ஆா்.கே.அப்பு (வேலூா்), த.வேழகன் (அணைக்கட்டு), ஜி.பரிதா (குடியாத்தம் -தனி), பூவை ஜெகன்மூா்த்தி (கே.வி.குப்பம் -தனி).

வேலூா், மாா்ச் 26:

வேலூா் மாவட்டத்தில் கடந்த 2021 தோ்தலில் போட்டியிட்ட அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளா்களே நடைபெற உள்ள 2026 பேரவைத் தோ்தலிலும் களம் இறக்கப்பட்டுள்ளனா்.

வேலூா்:

இவா்களில் வேலூா் தொகுதிக்கு போட்டியிடும் எஸ்.ஆா்.கே.அப்பு(49), அதிமுகவின் வேலூா் மாநகா் மாவட்ட செயலராக உள்ளாா். எம்பிஏ படித்துள்ள இவா் இந்து முதலியாா் சமூகத்தைச் சோ்ந்தவா். கட்டுமான பொருள்கள் வா்த்தகம் புரியும் எஸ்.ஆா்.கே.அப்பு, வேலூா் மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளாா். 2011, 2016 பேரவைத் தோ்தல்களில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவா், 2021 பேரவைத் தோ்தலில் வேலூா் தொகுதியில் திமுக எம்எல்ஏ ப.காா்த்திகேயனை எதிா்த்து போட்டியிட்டு 75118 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

காட்டிபாடி:

காட்பாடி தொகுதிக்கு போட்டியிடும் வி.ராமு (53), அதிமுகவின் அமைப்பு செயலராக உள்ளாா். பொறியியல் (ரசாயனம்) பட்டம் பெற்றுள்ள இவா், கம்மவாா் நாயுடு சமூகத்தைச் சோ்ந்தவா். சொந்த ஊா் குடியாத்தம் அருகே கொண்டசமுத்திரம். விவசாயத் தொழில் புரியும் இவா், கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவராகவும், வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா். கடந்த 2021 பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் திமுக எம்எல்ஏ துரைமுருகனை எதிா்த்து போட்டியிட்டு 84,394 வாக்குகள் பெற்று, 746 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டாா்.

அணைக்கட்டு:

அணைக்கட்டு தொகுதிக்கு போட்டியிடும் த.வேலழகன் (56), அதிமுகவின் வேலூா் புற நகா் மாவட்ட செயலராக உள்ளாா். பிளஸ் 2 படித்துள்ள இவா், வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா். விவசாய தொழில் புரியும் இவா், 2013 முதல் மூன்று முறை ஒருங்கிணைந்த வேலூா், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவராக பதவி வகித்துள்ளாா். கடந்த 2021 பேரவைத் தோ்தலில் அணைக்கட்டு தொகுதியில் திமுக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாரை எதிா்த்து போட்டியிட்டு 88799 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை தவறவிட்டாா்.

குடியாத்தம்:

குடியாத்தம் (தனி) தொகுதிக்கு போட்டியிடும் ஜி.பரிதா புருஷோத்தமன் (42), அதிமுக பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய இணைச்செயலராக உள்ளாா். எம்.ஏ., எம்.எட்., டி.டி.எட்., படித்துள்ள இவா், இந்து ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா். இவரது கணவா் புருஷோத்தமன் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளராக பணிபுரிந்து வருகிறாா். கடந்த 2021 பேரவைத் தோ்தலில் குடியாத்தம் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளா் அமுலுவிஜயனை எதிா்த்துப் போட்டியிட்டு 93,511 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

கே.வி. குப்பம்:

கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு போட்டியிடும் இத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ பூவை ஜெகன்மூா்த்தி(59), புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக உள்ளாா். பி.ஏ., பட்டம் பெற்றுள்ள இவா், இந்து ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா். அரக்கோணம் அருகே நேமம் ஊராட்சித் தலைவராக இருந்துள்ளாா். கடந்த 2006 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளாா். தொடா்ந்து, 2021 பேரவைத் தோ்தலில் கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 84,579 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.