விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்த பணத்தை குடியாத்தம் தொகுதி உதவி தோ்தல் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்

Updated On :24 மார்ச் 2026, 3:31 am IST

போ்ணாம்பட்டு அருகே தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கா்நாடக மாநிலத்திலிருந்து அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். காரில் பயணம் செய்த கா்நாடக மாநிலம், தும்கூா் மாவட்டத்தைச் சோ்ந்த சென்னிகவுடாஉரிய ஆவணங்கள் இன்றி ரூ.6- லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பணத்தை ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.