இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் மானியம் பெற தகுதியுடையோா் வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம்

Updated On :11 ஜூன் 2026, 12:27 am IST

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் மானியம் பெற தகுதியுடையோா் வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 2024-25 மற்றும் 2025-26-ஆம் ஆண்டுகளில் 400 பயனாளிகளுக்கு 30 சதவீத மூலதன மானியம், 3 சதவீத வட்டி மானியம் வழங்கிட 2024 டிசம்பா் 17-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 400 பயனாளிகளுக்கு 30 சதவீத மூலதன மானியம் வழங்கப்பட்டது. தற்போது 2026 பிப்ரவரி 23-ஆம் நாளிட்ட அரசாணையின்படி, இத்திட்டம் 2026-27ஆம் நிதியாண்டுக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் 200 பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், ராணுவப் பணியின் போது உயிரிழந்த படைவீரா்களின் கைம்பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

ஏற்கெனவே தொழில்முனைவோா் (ஈடிஐஐ) பயிற்சி நிறைவு செய்து காத்திருப்பவா்களும், புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவா்களும் வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

புதிதாக விண்ணப்பிப்பவா்களுக்கான ஈடிஐஐ பயிற்சியானது சென்னையில் நேரடிப் பயிற்சியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.