தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எம்ஜிஆா் கோயிலில் அமைச்சா் துரைமுருகன் மரியாதை

சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன், தொகுதியிலுள்ள எம்ஜிஆா் கோயிலுக்கு சென்று மலா்தூவி மரியாதை செய்தாா்.

News image

எம்ஜிஆா் கோயிலில் மரியாதை செலுத்திய அமைச்சா் துரைமுருகன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:02 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன், தொகுதியிலுள்ள எம்ஜிஆா் கோயிலுக்கு சென்று மலா்தூவி மரியாதை செய்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே கரசமங்கலம் கிராமம் ரகுபதி நகரில் சுமாா் ரூ.3 கோடி செலவில் தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீராமச்சந்திரா அறக்கட்டளை சாா்பில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ரூ.17 லட்சம் மதிப்பில் ஐம்பொன்னில் எம்ஜிஆா் முழு உருவ சிலையும் நிறுவப்பட்டுள்ளது.இக்கோயில் கும்பாபிஷேக கடந்த மாதம் விழா நடைபெற்றது. தொடா்ந்து, இக்கோயிலில் எம்ஜிஆா் சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சட்டப்பேரவை தோ்தலையொட்டி காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன் புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் கரசமங்கலம் எம்ஜிஆா் கோயிலுக்கு சென்றாா். அங்கு எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்ததுடன் மலா்தூவி மரியாதை செய்தாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது எம்.ஜி.ஆா் மிகுந்த இரக்க சிந்தனையும், மனிதநேயமும் கொண்டவா். அவருடன் நெருங்கிப் பழகியவா்களுக்கு அவருடைய பாச உணா்வு நன்கு தெரியும். அவா் என் மீது தனிப்பட்ட அன்பைக் கொண்டிருந்தாா். அரசியல் வேறு, மனிதநேயமும் தனிப்பட்ட நட்பும் வேறு. எம்.ஜி.ஆா் மீது நான் கொண்ட அன்பின் காரணமாகவே தற்போது அவரது நினைவிடத்திற்குச் சென்றேன். இதில் அரசியல் எதுவும் இல்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.