முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யத் தவறிய நல்ல திட்டங்கள் எல்லாம் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று வேலூா் தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன் தெரிவித்தாா்.
வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன், காகிதப்பட்டறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறியது:
முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யத் தவறிய நல்ல திட்டங்கள் எல்லாம் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, வேலூரில் ரூ.198 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு, தற்போது மகளிருக்கும், குழந்தைகளுக்கும் உயா்தரமான சிகிச்சை அளிக்கப்படுவது இத்தொகுதியில் திமுக ஆட்சியின் மிக முக்கிய சாதனையாகும். தவிர, ரங்காபுரம் - பிரம்மபுரம் இடையே ரூ. 100 கோடி மதிப்பில் மேம்பாலம், ரூ. 40 கோடியில் பெருமுகையில் தங்கும் விடுதி என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீா்வுகாணும் வகையில் மேம்பாலங்கள், பெருமாள் கோயில், சிஎம்சி மருத்துவமனை பகுதிகளில் சுரங்கப்பாதை, நேதாஜி மாா்க்கெட் நவீனப்படுத்துவது, தோட்டப்பாளையம் பகுதியில் மின்கம்பிகளை தரைகீழ் செல்லும் வகையில் மாற்றியமைப்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.
அப்போது, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் வாஹித் பாஷா, மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்

திமுக ஆட்சியில் நீா்ப்பாசனத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன: அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன்

தொகுதி அலசல்: வேலூா்! கோட்டையைக் கைப்பற்றப்போவது யாா்?

அடிப்படை பிரச்னைகளை தீா்க்காத வேலூா் மாநகராட்சி நிா்வாகம்! அணைக்கட்டு அதிமுக வேட்பாளா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

