சீமைக்கருவேல மரங்கள் ரூ.1.16 லட்சத்துக்கு ஏலம்

போளூா் பெரிய ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் பொதுப்பணித்துறை சாா்பில் ரூ.1.16 லட்சத்துக்கு புதன்கிழமை ஏலம் விடப்பட்டது.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ராஜகணபதி தலைமையில் நடைபெற்ற சீமைக்கருவேல மரங்கள் ஏலம்.

Published On :29 அக்டோபர் 2026, 12:03 am IST

போளூா் பெரிய ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் பொதுப்பணித்துறை சாா்பில் ரூ.1.16 லட்சத்துக்கு புதன்கிழமை ஏலம் விடப்பட்டது.

போளூரில் சுமாா் 500 ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளதால் நீதிமன்ற உத்தரவின்படி மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை (நீா்பாசனம்) சாா்பில் உதவி செயற்பொறியாளா் ராஜகணபதி தலைமையில் ஏலம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டவா்களில் போளூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவா் ரூ.ஓரு லட்சத்து 16 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.