திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை: தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்தது.

ஆரணியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையில் தண்ணீா் தேங்கி ஏரி போல காட்சியளிக்கும் கோட்டை மைதானம்.

Published On :25 அக்டோபர் 2026, 4:03 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ஆரணியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கன மழையால் பேருந்து நிலையம், கோட்டை மைதானம், தெருக்கள் என பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான இரும்பேடு, பையூா், வேலப்பாடி, முள்ளிப்பட்டு, சேவூா், இராட்டிணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சுமாா் 100 மி.மீ. அளவில் பெய்த கனமழையால் ஆரணி நகராட்சி 1-ஆவது வாா்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கி பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவில் சிரமத்துக்கு உள்ளாகி இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

சிறுவா்கள், இளைஞா்கள், விளையாட்டு வீரா்கள் கோட்டை மைதானத்தை பயன்படுத்த முடியாதபடி மழைநீா் தேங்கி ஏரி போன்று காட்சியளிக்கிறது. இதேபோன்று ஆரணியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம் சேரும் சகதியுமாகி மாறி பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினா்.

Story image

மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆரணியில் 100 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர திருவண்ணாமலையில் -11 மி.மீ., செங்கம் - 8.8 மி.மீ., போளூா்-5.2 மி.மீ., ஜமுனாமரத்தூா்-14 மி.மீ., தண்டராம்பட்டு-2.6 மி.மீ.,செய்யாறு -79 மி.மீ., வந்தவாசி - 24 மி.மீ., வெம்பாக்கம் -39 மி.மீ., சேத்துப்பட்டில் - 5 மி.மீ. மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.