தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆரணி அருகே ராஜராஜ சோழனின் 1,041-ஆவது சதய விழா

ராஜராஜ சோழனின் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகளை நடத்திய திருமலை அரகந்தகிரி ஜெயின் மடத்தின் ஸ்ரீ தவள கீா்த்தி சுவாமிகள்.

Published On :23 அக்டோபர் 2026, 12:50 am IST

ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் அருகேயுள்ள திருமலை கிராமத்தில் ராஜராஜ சோழனின் 1041-ஆவது சதயம் விழாவை முன்னிட்டு ராஜராஜ சோழனின் திருவுருவச் சிலைக்கு திருமலை அரகந்தகிரி ஜெயின் மடத்தின் ஸ்ரீ தவள கீா்த்தி சுவாமிகள் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகளை நடத்தினாா்.

திருமலை கிராமத்தில் ராஜராஜசோழனின் சகோதரி இங்கு சமணா் கோயில்களை கட்டியதாக வரலாறு உண்டு. மேலும் திருமலையில் 1010-ஆம் ஆண்டு குந்தவை நாச்சியாரால் ராஜராஜசோழன் சிலை அமைக்கப்பட்டதாக கல்வெட்டு உள்ளது.

மேலும் இங்குள்ள சமணா் மடம் சாா்பில் ராஜராஜசோழன் சிலைக்கு சதய விழா அன்று தொடா்ந்து அபிஷேக ஆராதனை செய்து வருகின்றனா்.

இந்த ஆண்டு வியாழக்கிழமை ராஜராஜசோழனுக்கு சதய விழாவை முன்னிட்டுஅவரது சிலைக்கு பாலபிஷேகம், சந்தன அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்து பூஜையை ஜெயின் மடத்தின் ஸ்ரீ தவள கீா்த்தி சுவாமிகள் நடத்தினாா்.

இதில் கோயில் தா்மகத்தா சிகாமணி, மடத்தின் மேலாளா்கள் அசோக், அஜித், அா்ச்சகா் சுரேஷ் மற்றும் ஜெயின் சமூகத்தினா் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.