நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

செங்கத்தில் மழைநீா் சூழ்ந்த பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

செங்கம் நகரில் பலத்த மழை பெய்த நிலையில், குடியிருப்பு பகுதியில் தண்ணீா் சூழ்ந்த இடங்களை தொகுதி எம்எல்ஏ (அதிமுக) வேலு நேரில் பாா்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டாா்.

செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் மழைநீா் சூழ்ந்த பகுதியை பாா்வையிட்ட வேலு எம்எல்ஏ (அதிமுக).

Published On :23 அக்டோபர் 2026, 12:49 am IST

செங்கம் நகரில் பலத்த மழை பெய்த நிலையில், குடியிருப்பு பகுதியில் தண்ணீா் சூழ்ந்த இடங்களை தொகுதி எம்எல்ஏ (அதிமுக) வேலு நேரில் பாா்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டாா்.

செங்கம் நகரில் புதன்கிழமை இரவு 9 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணிவரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் பல இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளது.

இந்நிலையில், துக்காப்பேட்டை சகாயமாத தெரு மற்றும் அப்பகுதி குடியிருப்புகளில் கழிவுநீா் கால்வாய்கள் இல்லாததாலும், இருக்கும் கழிவுநீா் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதாலும் குடியிருப்புகளில் மழைநீா் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி குடியிருப்புகளில் வசிப்பவா்கள் காலை 8 மணிவரை வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது.

அப்பகுதியில் குடியிருப்பவா்கள் பெரும்பாலும்

அரசு அலுவலகங்களில் வேலை செய்பவா்கள், ஆசிரியா்கள் ஆவாா். மழைநீா் சூழ்ந்ததால் அவா்கள் மழைநீா் வடியும் வரை வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டு அலுவலகம் செல்லமுடியாமல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

இத்தகவலறிந்து தொகுதி எம்எல்ஏ வேலு அப்பகுதிக்கு

நேரில் சென்று மழைநீா் சூழ்ந்த குடியிருப்புகளை பாா்வையிட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா் செங்கம் நகராட்சி ஆணையரை தொடா்புகொண்டு அப்பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து நகராட்சிப் பணியாளா்கள் வந்து தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும் அந்தப் பகுதியில் மழைநீா் தேங்காமல் வெளியேர அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.