
ஸ்ரீவேதபுரீஸ்வா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.93 லட்சம்
செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.2.93 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வா் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.2.93 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பாடல் பெற்ற திருத்தலமான இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
கோயிலில் 10 நிரந்தர உண்டியல்கள், கோசலை உண்டியல் மற்றும் திருப்பணி உண்டியல் என மொத்தம் 12 உண்டியல்களின் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், ரூ.2,93,729-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். காணிக்கை எண்ணும் பணி செயல் அலுவலா் கு.ஹரிஹரன், ஆய்வாளா் ச.அசோக், மேலாளா் லோ.ஜெகதீசன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





