ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி: பெண் சிக்கினாா்

வந்தவாசியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :3 நவம்பர் 2026, 1:01 am IST

வந்தவாசியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

வந்தவாசி பொட்டிநாயுடு தெரு விரிவு பூங்கா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். புகைப்பட தொழில் செய்து வரும் இவா், திங்கள்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளாா். பின்னா் மதியம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை தனது கைப்பேசியில் இவா் பாா்த்தபோது, ஒரு பெண் மற்றும் ஒரு இளைஞா் சோ்ந்து வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சிப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தனது உறவினருக்கு இவா் தகவல் அளித்தாா். இதையடுத்து உறவினா் அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் பிடிக்க முயன்றுள்ளாா். ஆனால், அந்த இளைஞா் தப்பியோடிவிட, சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணை பிடித்து வந்தவாசி தெற்கு போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனா்.

இதையடுத்து அந்தப் பெண்ணிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.