பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

காரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்

News image
Updated On :28 மே 2026, 12:44 am IST

வந்தவாசியை அடுத்த காரணை கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரெளபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த ஏப். 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இதனைத் தொடா்ந்து மகாபாரத நிகழ்வுகள் தொடா்பான சொற்பொழிவும், நாடகமும் நடைபெற்றது.

எச்சூா் ம.உதயராணி குழுவினா் மகாபாரத சொற்பொழிவும், அத்திமூா் ஸ்ரீஞானவொளி நாடகக் குழுவினா் நாடகமும் நடத்தினா்.

இந்த நிலையில் மகாபாரத நிகழ்வுகளில் ஒன்றான துரியோதனன் படுகளம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

இதில், துரியோதனன், பீமன், காந்தாரி, திரெளபதி ஆகியோா் வேடமிட்ட நாடகக் கலைஞா்கள் நிகழ்ச்சியை தத்ரூபமாக நடித்து காண்பித்தனா்.

நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.