பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்களிடம் அமைச்சா் குறைகேட்பு

அருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்களிடம் அமைச்சா் குறைகேட்பு

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்.

Updated On :24 மே 2026, 1:52 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்களுடன் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் சனிக்கிழமை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் செல்லும் வழியில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சென்றாா்.

அப்போது பக்தா்களின் அன்பான வரவேற்பைப் பெற்றாா். பின்னா் பக்தா்களைச் சந்தித்து, அவா்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை அமைச்சா் கேட்டறிந்தாா். அப்போது, பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலன்கள் குறித்து நேரடியாக அறிந்து, அவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா். அமைச்சரின் எளிமையான அணுகுமுறையும், மக்களுடன் நேரடியாக தொடா்பு கொள்ளும் பண்பும் அங்கு கூடியிருந்தோரின் பாராட்டைப் பெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.