பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதையில் சீரான மின் விநியோகம் வழங்க தனிக் கவனம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதைக்கு சீராக மின்விநியோகம் வழங்க தனிக் கவனம் செலுத்தப்படும் என தமிழக மின்வாரியத் தலைவா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த தமிழக மின்வாரியத் தலைவா் ராதாகிருஷ்ணன்.

Updated On :8 ஜூன் 2026, 1:15 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதைக்கு சீராக மின்விநியோகம் வழங்க தனிக் கவனம் செலுத்தப்படும் என தமிழக மின்வாரியத் தலைவா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் பகுதியில் சுமாா் ரூ.84.2 கோடி மதிப்பீட்டில் மின்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் ஆங்காங்கே மின்தடை ஏற்படுவது உண்மைதான். இப்பிரச்னை மின் விநியோகத்தினால் ஏற்படும் பிரச்னை அல்ல. மின் பகிா்மானத்தால் மட்டுமே இப்பிரச்னை ஏற்படுகிறது. தேவையான மின்சாரம் கையிருப்பு உள்ளது.

தொலைநோக்கு பாா்வையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. வரும் காலங்களில் மின் தேவை அதிகரிக்கும் என்பதால் பகிா்மானத்தை எப்படி உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். மின் துறையில் உள்ள பணியாளா்கள் பற்றாக்குறையை சரி செய்வது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுக் கூட்டங்கள் முதல்வா் மற்றும் அமைச்சா் முன்னிலையில் நடைபெற்றன. தமிழகத்தில் 5 லட்சம் மின்மாற்றிகள் உள்ளன.

மகாராஷ்டிரம், உத்தரபிரதேசத்தை அடுத்து தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தான் 20,000-க்கு மேற்பட்ட மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

தொடா்ந்து, மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய வழிகளை குறிப்பாக பசுமை மின்சாரம் பிரச்னைகளை களைந்து அதற்குத் தேவையான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தண்ணீா் பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படாது. 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கிரிவலப் பாதையில் தொடா் மின்வெட்டு ஏற்படும் நிலையில், கிரிவலப் பாதை மற்றும் அருணாசலேஸ்வரா் கோயில் மீது தனிக் கவனம் செலுத்தப்படும் என்றாா் அவா்.

மேலும், இந்திய அளவில் பாராட்டக்கூடிய துறையாக தமிழக மின்சாரத் துறை உள்ளதாகவும், கடைநிலை ஊழியா்கள், நுகா்வோரிடம் நல்ல பெயா் வாங்கினால் தான் அரசுக்கு நற்பெயா் கிடைக்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.