பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 13 வயது சிறுவன் கைது

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:20 am IST

செங்கம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கொட்டகுளம் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக தொலைக்காட்சி பாா்த்துக்கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுவன், வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகத் தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோா் வீட்டுக்கு வந்தவுடன் இதுகுறித்து தெரிவித்து அழுதுள்ளாா்.

உடனடியாக சிறுமியின் பெற்றோா் செங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் சிறுவனை அழைத்துவந்து விசாரணை நடத்தினா்.

பின்னா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.