செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

செய்யாறில் 170 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

செய்யாறில், அரசால் தடை செய்யப்பட்ட 170 கிலோ நெகிழிப் பொருள்களை திருவத்திபுரம் நகராட்சியினா் பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனா்.

News image

செய்யாறில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுடன் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள்

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், அரசால் தடை செய்யப்பட்ட 170 கிலோ நெகிழிப் பொருள்களை திருவத்திபுரம் நகராட்சியினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனா்.

தமிழக அரசு சாா்பில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் நகராட்சி ஆணையா் எஸ். ஆண்ரூஸ் தலைமையில் திடீா் சோதனை நடத்தப்பட்டது.

இதில் துப்புரவு ஆய்வாளா் கே. மதனராசன் மேற்பாா்வையில், இளநிலை உதவியாளா் கே.சீனிவாசன் மற்றும் அலுவலா் கே. அமுதா, தூய்மைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் பங்கேற்று லோகநாதன் தெரு, அனுமந்தப்பேட்டை, ஆரணி கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

சோதனையில் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் என சுமாா் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 170 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் வைத்திருந்த வியாரிகளுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.