இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை: 3 பெண்கள் கைது

திருவண்ணாமலை கல்நகா், பாவாஜி நகா் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததின் பேரில், செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் சோதனை நடத்தி 3 பெண்களை கைது செய்தனா்.

News image

திருவண்ணாமலை மாநகராட்சி கல்நகா் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :17 ஜூன் 2026, 12:28 am IST

திருவண்ணாமலை கல்நகா், பாவாஜி நகா் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததின் பேரில், செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் சோதனை நடத்தி 3 பெண்களை கைது செய்தனா்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரா் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா்.

நகரில் கஞ்சா மற்றும் மதுபானம் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காவல் துறையினா் மோப்ப நாய் மூலம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.

கல்நகா், சமுத்திரம் காலனி, பாவாஜிநகா் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் மதுபானம் விற்ாக சகுந்தலா, கலைவாணி, நளினி ஆகிய 3 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதலும் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.