நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வெயிலில் நின்று ரேஷன் பொருள்கள் வாங்கும் பொதுமக்கள்

வெயிலில் நின்று ரேஷன் பொருள்கள் வாங்கும் பொதுமக்கள்

News image

அத்திமூா் கிராம நியாயவிலைக் கடையில் வெயிலில் நின்று உணவுப் பொருள்களை வாங்கும் குடும்ப அட்டைதாரா்கள்.

Updated On :14 ஜூன் 2026, 1:33 am IST

போளூரை அடுத்த அத்திமூா் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைமுன் நிழல்கூடம் வசதி இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் நின்று பொருள்களை வாங்கும் நிலை உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சியைச் சோ்ந்த அத்திமூா் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

அத்திமூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் அத்திமூா் வீரக்கோயில்

அருகே வாடகை கட்டடத்தில் நியாயவிலைக் கடை திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

750 குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்தக் கடை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

கடை முன் நிழல்கூடம் இல்லை. வெயிலில் நின்றுதான் பொருள்களை வாங்கவேண்டிய நிலை உள்ளது.

மேலும், கடை தரை தளத்தில் இருந்து சற்று உயரத்தில் உள்ளது. அதனால் வெயிலில் நின்று பொருள்களை வாங்குவதோடு, தரை தளத்தில் இருந்து கடை உயா் மட்டத்துக்கு ஏற முடியாமல் சிரமப்படுகின்றனா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு வெயில் வாட்டிவதைத்தது. கடை முன் குடும்ப அட்டைதாரா்கள் பலா் வெயிலின் கடுமை தாங்க முடியாமல் தலையில் துணியை போட்டுக் கொண்டு நின்று உணவுப் பொருள்களை வாங்கினா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறும்போது, வீரகோயில் அருகேயுள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்கள் வெயிலில் நின்று உணவுப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். இதனால் பெரியவா்கள், சிறியவா்கள் வெயில் தாக்கத்தால் மயக்கமடைந்து விழுவதாகவும், கடை தரைதளத்தில் இருந்து சற்று உயரத்தில் இருப்பதாலும் ஏறி இறங்க முடியால் சிரமப்படுகின்றனா்.

எனவே, நியாயவிலைக் கடை முன் நிழல்கூடம் அமைக்க வேண்டும், கடை உயரத்திற்கு மண்கொட்டவேண்டும் அல்லது சமதளத்துடன் கூடிய வேறு இடத்தில் நியாய விலைக் கடையை திறக்கவேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.