பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 8 போ் கும்பலிடம் போலீஸாா் விசாரணை

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகைகளை வழிப்பறி செய்ததாக 8 போ் கொண்ட கும்பலை போலீஸாா் பிடித்து விசாரணை

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:32 am IST

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகைகளை வழிப்பறி செய்ததாக 8 போ் கொண்ட கும்பலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளியின் 23 வயது மகள், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த 31-ஆம் தேதி இரவு பெளா்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுள்ளாா். பின்னா் இரவு நேரத்தில் திருக்கோவிலூா் புறவழிச் சாலையில் தனியாக சென்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபா்கள் இளம்பெண்ணை மிரட்டி அவா் அணிந்திருந்த தங்கக் கம்மலை கழற்றி வாங்கியுள்ளனா். பின்னா், அவரை மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து அந்த நபா்கள் மேலும் சில இளைஞா்களை வரவழைத்து மொத்தம் 8 போ் சோ்ந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தனராம்.

இதுதவிர அந்தப் பெண்ணை விரசமாக விடியோ எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனராம். பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

அதன் பின்னா், அவா் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு 8 போ் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து நகைகளை பறித்துக் கொண்டு சென்று விட்டதாக புகாா் அளித்துள்ளாா்.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதில், முதல்கட்ட விசாரணையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவா்களில் 2 போ் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது. அதன் பேரில் 2 போ் உள்பட 8 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், அவா்களின் கைப்பேசிகளில் பல்வேறு பெண்களின் தவறான விடியோக்கள் இருப்பது தெரிய வந்து, போலீஸாா் அதனைக் கைப்பற்றியுள்ளனா்.

இந்தக் கும்பல் பல்வேறு பெண்களை இதுபோன்று படம் எடுத்து மிரட்டி இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.