லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

செய்யாறில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

Published On :26 ஜூலை 2026, 1:33 am IST

செய்யாறு அருகேயுள்ள அத்திகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம், சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சத்யா. தம்பதிக்கு துா்காதேவி என்ற மகளும், தமிழ்செல்வன் என்ற மகனும் உள்ளனா்.

துா்காதேவி அனக்காவூா் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், அவா் வெம்பாக்கம் பள்ளியில் நடைபெறும் கபடிப் போட்டியில் பங்கேற்பதற்காக தந்தையுடன் பைக்கில் சனிக்கிழமை அதிகாலை செய்யாறு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். புறவழிச்சாலையில் தனியாா் பள்ளி அருகே சென்றபோது, பைக் நிலைடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற தனியாா் நிறுவன பேருந்து மாணவி துா்காதேவி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த துா்காதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் சென்று உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.