லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

Published On :16 ஜூலை 2026, 12:12 am IST

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பிற்பகல் கோயில் வளாகத்தில் ஸ்வயம்வர கலா பாா்வதி மூலமந்திர ஹோமம் மற்றும் மாங்கல்ய பூஜை நடைபெற்றது.

இரவு உற்சவா் அம்மனுக்கு 32 திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு மகாராணி அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உலா நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், ஆனி மாத அமாவாசை உற்சவ குழுவினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.