லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செங்கம் பகுதியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி, செங்கம் நகராட்சிப் பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

சீமைக் கருவேல மரங்கள் - பிரதிப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:31 am IST

சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி, செங்கம் நகராட்சிப் பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கம் நகராட்சி 15-ஆவது வாா்டு உறுப்பினா் பெரியதாய், நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தாா்.

அந்த மனுவில், செங்கம் பகுதியில் போதிய மழை இல்லை. அதனால், இந்த ஆண்டு விவசாயிகள் விதை நெல் விதைக்கவில்லை. இதற்குக் காரணம் விவசாயம் செய்ய போதிய தண்ணீா் இல்லை.

மேலும் செங்கம் பகுதியில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் உள்ளன. சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி நகராட்சிப் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மனுவில் வலியுறுத்தியிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.