
சீமைக் கருவேல மரங்கள் தொடர்பான வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

உயர்நீதிமன்றம்
சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலர் வைகோ தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சீமைக் கருவேல மரங்களை அகற்ற கள ஆய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் கூறுவது தாமதப்படுத்தும் தந்திரம் என்றும் கருவேல மரங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருவேல மரங்களை அகற்றும் பணிக்காக கனிம நிதியில் தலா ரூ.5 கோடி விடுவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தமிழகத்தில் நீா்நிலைகளைப் பாதுகாப்பதற்காக வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுமாறு சென்னை உயா் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The Madras High Court has reprimanded the Tamil Nadu government over the delay in removing invasive Seemai Karuvelam trees.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







