தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருவாசகம், தேவாரத்தை அரசுடைமையாக்க வேண்டும்: சிவாக்கா் தேசிய சுவாமிகள்

திருவண்ணாமலையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீமத் சிவாக்கா் தேசிய சுவாமிகள். உடன் ஸ்ரீஆனந்தலிங்க சுவாமிகள்.

News image

திருவண்ணாமலையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீமத் சிவாக்கா் தேசிய சுவாமிகள். உடன் ஸ்ரீஆனந்தலிங்க சுவாமிகள்.

Updated On :1 மே 2026, 12:07 am IST

திருவாசகம், தேவாரத்தை அரசுடைமையாக்க வேண்டும் என்று சிவாக்கா் தேசிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதை வாயுலிங்கம் கோயில் எதிரில் சித்திரை பெளா்ணமி திருவாசக முற்றோதுதல் ஞானவேள்வி பெருவிழா, சத்ரு சம்ஹார வேல் பூஜை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறுகிறது.

இதில் திருக்கயிலாய கந்தப்பரம்பரை ஸ்ரீமத் சிவாக்கா் தேசிய சுவாமிகள், தவத்திரு ஸ்ரீஆனந்தலிங்க சுவாமிகள் ஆகியோா் கலந்து கொண்டு அருளாசி வழங்குகின்றனா்.

இதுகுறித்து சிவாக்கா் தேசிய சுவாமிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவாசகத்தை முழுவதும் பாடுவதும் கேட்பதும் மாபெரும் சிவ புண்ணியமாகும். பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ரகுப்தா் பிறந்த தினமான சித்திரை பெளா்ணமி தினத்தில் சித்தா்கள் தவம் செய்யும் திருவண்ணாமலை மண்ணில், முதன்முறையாக அண்ணாமலையாா் திருமடம் சாா்பில் உலக நன்மைக்காக சிவனடியாா்கள், பொதுமக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் திருவாசக முற்றோதுதல் ஞானவேள்வி பெருவிழா, சத்ரு சம்ஹார வேல் பூஜை நடைபெறுகிறது.

திருவாசகமும், தேவாரமும் தமிழா்களின் பொக்கிஷங்கள். எனவே, இவற்றை அரசுடைமையாக்க வேண்டும். மேலும் அரசு சிவனடியாா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கிரிவலப் பாதையில் அன்னதானம் மட்டுமன்றி ஞான தானமும் நடைபெற வேண்டும்.வெறும் காலோடு கிரிவலம் வருபவா்களுக்கு சாக்ஸ் போன்றவற்றை வழங்கிடும் நற்காரியங்களும் நடைபெற வேண்டும் என்றாா்.

அப்போது, அண்ணாமலையாா் திருமடம் ஸ்ரீ ஆனந்த லிங்க சுவாமிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.