ஆரணி திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனனுக்கு வாக்களிக்க அவரது மகன் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து தனது முதல் வாக்கை பதிவு செய்தாா்.
ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக மகாலட்சுமி கோவா்த்தனன் களத்தில் உள்ளாா். இவரது மகன் ராஜ்காந்த் (18) ஆஸ்திரேலியாவில் பிசினஸ் ஐ.டி. படித்து வருகிறாா்.
முதல் முறை வாக்காளரான இவா், தனது முதல் வாக்கை தாய்க்கு செலுத்துவதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து விமான பயணத்தை மேற்கொண்டு ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலத்துக்கு வந்து வாக்களித்தாா்.
இதுகுறித்து ராஜ்காந்திடம் கேட்டதற்கு, எனது முதல் வாக்கை தாய்க்கு பதிவு செய்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பாக்கியம் வேறு யாருக்காவது கிடைக்குமா என்று தெரியவில்லை என்றாா்.
ஒரு வாக்கு தானே என்று அசட்டையாக இல்லாமல் கடல் தாண்டி வந்து ஜனநாயக கடமையாற்றிய அவருக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (09.05.2026) - ரிஷபம்

வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் வருகை!

கோவையில் இருந்து வாக்களிக்க சொந்த ஊா் புறப்பட்ட மக்கள்

தேர்தல் அன்று: வாழ்க்கையை மாற்றும் பேச்சு...
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

