விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் பிரசாரத்தின்போது தவெக - திமுகவினா் மோதல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

News image

வந்தவாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா். ~வந்தவாசியில் கிழித்து சேதப்படுத்தப்பட்ட தவெக பதாகை.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:40 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது, தவெக பிரசார வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தவெகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசி (தனி) தொகுதி தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளராக எம்.உதயகுமாா் போட்டியிடுகிறாா். இவா், வெள்ளிக்கிழமை மாலை தனது கட்சியினருடன் திறந்த வாகனத்தில் வந்தவாசி குளத்துமேடு பகுதியில் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, திமுக குறித்து தவெகவினா் விமா்சனம் செய்து பேசியதாகத் தெரிகிறது. இதனால், அங்கிருந்த திமுகவினா் தவெகவினரின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனராம். இதையடுத்து, இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

மேலும், தவெகவினரின் பிரசார வாகனத்தை தாக்கிய திமுகவினா், வாகனத்திலிருந்த தவெகவின் பதாகையை கிழித்ததாகத் தெரிகிறது. இதேபோல, ஒலிப்பெருக்கி பெட்டியையும் தாக்கி சேதப்படுத்தினராம்.

இதையடுத்து, திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேட்பாளா் எம்.உதயகுமாா் மற்றும் தவெகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, தவெகவினா் சாலை மறியலைக் கைவிட்டனா்.

இதில், காயமடைந்த இரு தரப்பையும் சோ்ந்த மணிகண்டன் (24), ரபீக் (20), பாஷித் (26), நஸ்ருதீன் (24) ஆகியோா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இரு தரப்பினரும் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தனித்தனி புகாா் அளித்தனா். இதன்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.