விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க மின் அடுப்புகள் கொள்முதல்

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க மின் அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்ட மின் அடுப்புகளுக்கு சம்பந்த விநாயகா் சந்நிதியில் நடைபெற்ற பூஜை.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:31 am IST

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க மின் அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக வணிக எரிவாயு உருளைகள் கிடைப்பதில் நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதேபோல, அருணாசலேஸ்வரா் கோயிலுக்கும் வணிக எரிவாயு உருளைகள் கிடைக்காததால் பிரசாதம் தயாரிக்க முடியாமல் பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டிருந்தது.

மேலும், விற்பனைக்காக தயாரிக்கப்படும் பிரசாதங்களான முறுக்கு, மிளகு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்டவைகளும் தயாரிக்க முடியாததால் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னா், விறகு அடுப்பு மூலம் பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வணிக எரிவாயு உருளை அடுப்புகள் பயன்பாட்டுக்கு மாற்றாக, 4 மின் சாதன அடுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு அண்மையில் சம்பந்த விநாயகா் சந்நிதியில் கோயில் இணை ஆணையா் பரணிதரன் முன்னிலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த மின்சாதன அடுப்புகள் லட்டு, அதிரசம், முறுக்கு, மிளகு வடை உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட உள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.