திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பாமக ராமதாஸ், அன்புமணி அணிகளின் ஆதரவாளா்களிடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ராமதாஸ் அணி வேட்பாளா் முரளி சங்கா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டாா்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அன்புமணி அணி இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளராக அக்கட்சி நிா்வாகி பி.ராணி அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், வந்தவாசி (தனி) தொகுதி பாமக ராமதாஸ் அணி வேட்பாளராக பொதுச் செயலா் முரளி சங்கா் கடந்த 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டாா். இவா், பிரசாரத்தை தொடங்கும் வகையில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்க ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை காலை வந்தாா்.
அப்போது, அங்கு வந்த பாமக அன்புமணி தரப்பு ஆதரவாளா்கள், பாமகவின் கொடியை முரளி சங்கா் பயன்படுத்த எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இரு பிரிவு ஆதரவாளா்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, போலீஸாா் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என புகாா் தெரிவித்து, ராமதாஸ் அணி வேட்பாளா் முரளி சங்கா் திடீரென அந்தப் பகுதியிலுள்ள சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதையடுத்து, வேட்பாளா் முரளி சங்கா் மற்றும் இரு அணி ஆதரவாளா்களையும் வந்தவாசி தெற்கு போலீஸாா் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செஞ்சி தொகுதியை கைப்பற்றிய பாமக

ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி - அன்புமணி

தருமபுரி தொகுதி வளா்ச்சி அடைய சௌமியாவுக்கு வாக்களியுங்கள்

பாமக ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளா்கள் வாக்குவாதம்: சாலை மறியல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

