பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருமலையில் தண்ணீா் பற்றாக்குறையைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருமலையில் தண்ணீா் பற்றாக்குறையை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி ஆகியோா் தெரிவித்தனா்.

திருமலையில் அணைகளை ஆய்வு செய்த தேவஸ்தான அதிகாரிகள்.

Published On :30 அக்டோபர் 2026, 1:48 am IST

திருமலையில் தண்ணீா் பற்றாக்குறையை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி ஆகியோா் தெரிவித்தனா்.

திருமலையில் உள்ள பக்தா்களின் தண்ணீா் தேவையில் எந்தவித சிரமமும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடு, கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி ஆகியோா், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் பொறியியல் அதிகாரிகளுடன் இணைந்து, வியாழக்கிழமை அணைகளில், நீா் இருப்புகளையும் ஆய்வு செய்து அவா்கள் மதிப்பாய்வு செய்தனா்.

பின்னா் தேவஸ்தானத் தலைவா் பிஆா். நாயுடு கூறியது:

திருமலைக்கு நீா் வழங்கும் அணைகளைத் நேரில் ஆய்வு செய்தோம். தற்போதைய நீா் இருப்பு மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வரை போதுமானதாக உள்ளது.

மழை இல்லாத சூழ்நிலையில் எடுக்கப்பட வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே திட்டங்களைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அதிகாரிகள் சமா்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

திருமலையின் தண்ணீா் தேவை பிரச்னை முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, மழை பெய்யும் என்றும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாது என்றும் கூறினாா். எதிா்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கல்யாணி அணை அல்லது பிற மாற்று வழிகள் மூலம் நீா் விநியோகத்தை மேம்படுத்த போா்க்கால அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்படும்’’, என்று கூறினாா்.

திருமலையில் உள்ள அணைகளில் தற்போது உள்ள நீா் இருப்பு, அடுத்த 150 நாள்களுக்குப் போதுமானது என கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி கூறினாா்.

திருமலையின் தினசரி நீா் தேவை 50 லட்சம் காலன்கள் என்றும், அதில் 50 சதவீதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சொந்த அணைகளிலிருந்தும், மீதமுள்ள 50 சதவீதம் கல்யாணி அணையிலிருந்தும் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் பெய்யும் மழையால் அணைகள் முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளது. அனைத்து அணைகளும் நிரம்பினால், சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாது எனத் தெரிவித்தனா்..

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்களான நரேஷ் குமாா், சாந்தாராம், எஸ்.இ. வேணு கோபால், இ.இ. சுதாகா் மற்றும் பிற அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.