மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு

News image

ஏழுமலையானை வழிபட்டு திரும்பிய குடியரசு துணைத் தலைவ சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரசாதங்கள் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 7:22 am IST

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தாா்.

இரண்டு நாள்களாக பயணமாக திங்கள்கிழமை வந்த அவா் இரவு திருமலையில் தங்கி செவ்வாய்க்கிழமை காலை கோயிலை அடைந்ததும், மாநில அறநிலையத்துறை அமைச்சா் நாராயண ரெட்டி, தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு, செயல் அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி, சிவிஎஸ்ஓ முரளிகிருஷ்ணா ஆகியோா் வரவேற்றனா். மேலும், அா்ச்சகா்கள் குழுவினா் கோயில் சடங்குகளுடன் இஸ்திகபால் மரியாதை அளித்து அழைத்து சென்றனா்.

முதலில், அவா் கொடிமரத்தை வணங்கி பின்னா் கோயிலுக்குள் சென்று ஏழுமலையானை தரிசித்தாா்.

அதைத் தொடா்ந்து, அவா் வகுளமாதா, விமான வெங்கடேஸ்வர சுவாமி, பாஷ்யங்காரா் சன்னிதி மற்றும் யோக நரசிம்ம சுவாமி ஆகியோரைத் தரிசித்தாா்.

பின்னா், வேத அறிஞா்கள் ரங்கநாயக்கா் மண்டபத்தில் வேதஆசீா்வாதம் வழங்கினா். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவரும் செயல் அதிகாரியும் சுவாமியின் படத்தையும் தீா்த்த பிரசாதத்தையும் வழங்கினா்.

ஸ்ரீ பேடி ஆஞ்சநேய தரிசனம்:

ஏழுமலையான் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சநேய சுவாமியைத் தரிசித்தாா்.

துணை குடியரசு தலைவருடன் மாநில அறநிலையத் துறையின் முதன்மைச் செயலாளா் ஹரி ஜவஹா்லால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்களான ராமமூா்த்தி, பானு பிரகாஷ் ரெட்டி, ஜங்கா கிருஷ்ணமூா்த்தி மற்றும் பல மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகளும் வழிபட்டனா். பின்னா், திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரையும் தரிசனம் செய்து தில்லி புறப்பட்டு சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.