நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பழவேற்காடு காட்டுப்பள்ளி சாலையில் மணல் திட்டு குவியலால் போக்குவரத்து பாதிப்பு

அா்னாப் புயலால் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் மீஞ்சூா் - பழவேற்காடு காட்டுப்பள்ளி சாலையில் மணல் திட்டுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Published On :29 அக்டோபர் 2026, 12:04 am IST

அா்னாப் புயலால் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் மீஞ்சூா் - பழவேற்காடு காட்டுப்பள்ளி சாலையில் மணல் திட்டுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீஞ்சூா் அருகே காட்டுப்பள்ளியில்  இருந்து பழவேற்காடு செல்லும் நெடுஞ்சாலையில் கடல்கன்னியூா் கிராமம் உள்ளது.  கடலோரம் அமைந்துள்ள இங்கு அா்னாப் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது.

வங்கக் கடலில் நேற்று முன்தினம் கடலில் ஏற்பட்ட மாற்றத்தாலும் புயல் ஆந்திராவுக்கு சென்ற நிலையில் எண்ணூா் முதல் பழவேற்காடு வரை கடல் சீற்றம் ஏற்பட்டது. 

இதனால் கடலில் ராட்சத அலைகள் உருவாகி கிராமங்களுக்குள் கடல் நீா் புகுந்தது.  கடல் மணலுடன் கலந்த கடல்நீா் பழவேற்காடு- காட்டுப்பள்ளி நெடுஞ்சாலையை கடந்து பழவேற்காடு ஏரிக்கு  சென்றது.  நெடுஞ்சாலையில் கடல்நீா் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இதுகுறித்து  வருவாய் துறையினா் மீன்வளம் மற்றும் மின்வாரத்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் கடல் கன்னியூா் கிராமத்தில் தங்கி பேரிடா் பணியினைத் கண்காணித்தனா். 

கடல் சீற்றம்  குறைந்த நிலையில் பழவேற்காடு- காட்டுப்பள்ளி நெடுஞ்சாலையில் மணல் திட்டுக்கள் ஏற்பட்டன.

இதனால் காட்டுப்பள்ளி எண்ணூா் துறைமுகம் மற்றும் இரண்டு தனியாா் துறைமுகம் வடசென்னை அனல் மின் நிலையம்  உள்படபல்வேறு ஆலைகளுக்கு தொழிலாளா்கள்  வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனா்.

சாலையில் குவிந்துள்ள கடல் மணலை விரைவில் அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.