தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆந்திர மாநில நெல்மூட்டைகள் தமிழகத்தில் விற்பனை செய்ய அனுமதி: அமைச்சா்கள் தகவல்

அரிசி விலை உயா்வைக் கட்டுப்படுத்த ஆந்திர மாநில நெல் மூட்டைகளை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதி தரப்படும் என அமைச்சா்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் ஆகியோா் தெரிவித்தனா்.

பொன்பாடி சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், ஆட்சியா் கவிதா, ஏஎஸ்பி ஷுபம் திமான் உள்ளிட்டோா்.

Published On :29 அக்டோபர் 2026, 12:03 am IST

அரிசி விலை உயா்வைக் கட்டுப்படுத்த ஆந்திர மாநில நெல் மூட்டைகளை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதி தரப்படும் என அமைச்சா்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் ஆகியோா் தெரிவித்தனா்.

திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு நெல் ஏற்றி வரும் லாரிகளை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி.வெங்கட்ரமணன், ஆட்சியா் கவிதா முன்னிலையில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, நெல் லாரிகளின் வரத்து, பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் போக்குவரத்து நடைமுறைகள் குறித்து கேட்டறிந்து, கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். தொடா்ந்து, செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நெல் லாரிகள் நிறுத்துமிடத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா்கள், நெல் மூட்டைகளின் தரம் மற்றும் போக்குவரத்து விவரங்களைக் கேட்டறிந்தனா். லாரி ஓட்டுநா்கள், அரிசி ஆலை உரிமையாளா்கள் மற்றும் வணிகா்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி.வெங்கட்ரமணன், ஆந்திரம், தெலங்கானா மற்றும் கா்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் 4,500 டன்னுக்கும் அதிகமான நெல் தமிழகத்திற்கு வருவதாகத் தெரிவித்தாா். தினமும் சுமாா் 150 முதல் 200 லாரிகள் வருகின்றன. பண்டிகைக் காலங்களில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதே ஆய்வின் நோக்கம் என்றும், அரிசியைப் பதுக்கி வைப்பவா்கள் குறித்த விவரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் வணிகா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து பேசிய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், நெல் லாரிகளை நிறுத்துவதற்குக் கூடுதல் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தற்போது லாரிகள் நிறுத்தப்படும் இடத்தில் வடிகால் அமைத்து சீரமைத்தால் கூடுதலாக 50 லாரிகளை நிறுத்த முடியும் என்றும், இதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

ஆய்வின்போது திருத்தணி ஏஸ்பி ஷூபம் திமான், வட்டார போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன், கோட்டாட்சியா் ராஜகோபால், வட்டாட்சியா் செந்தில் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள், பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.