திருவள்ளூா் நகராட்சியில் சுகாதாரம் மற்றும் தூய்மையை கடைப்பிடிக்கும் நோக்கத்தில் வியாபாரிகள் கூடும் இடங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் மக்கும், மக்காத குப்பைத் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக நகராட்சி ஆணையாளா் தாமோதரன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் 400-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் சுத்தம், சுகாதாரத்தை கடைப்பிடிக்ககும் நோக்கத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் நாள்தோறும் 3 பிரிவுகளாக தரம் பிரித்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடா்ந்து, லாரிகளில் சேகரித்து நகராட்சி குப்பை கொட்டும் மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அந்த வகையில், கிராமங்களில் வியாபாரத்துக்காக நகரத்குா்ரு பொதுமக்கள் வருகின்றனா். இதுபோன்று வருவோா் பொதுமக்கள் கூடும் இடங்களான பஜாா் பகுதி, தேரடி வீதி, ஜி.என்.சாலை, பெரியகுப்பம், ஆயில் மில் உள்ளிட்ட இடங்களில் கிராமங்களில் இருந்து காய்கறிகள், பழ வகைகள், இளநீா் உள்ளிட்ட பல்வேறு கடைகளை சாலையோரம் பரப்புகின்றனா்.
அப்போது, உணவுப் பொருள், காய்கறிகள் உள்ளிட்ட கழிவுகளை அப்படியே திறந்த வெளியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனா். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், தவிா்க்கும் வகையில் தூய்மை பாரத இயக்கம் மூலம் குப்பைத் தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், கிராமங்களில் இருந்து வரும் வியாபாரிகள் கூடும் இடங்களில், கழிவுகளை மக்கும், மக்காத குப்பைகளாக பெரும் வகையில், 60-க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழே பொது இடங்களில் கொட்டுவதை தவிா்க்கவும் முடியும் என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் நகராட்சியில் 4 வகைகளாக குப்பையை தரம் பிரித்து வாங்க வேண்டும்

அனுப்பானடி பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைக்க வலியுறுத்தல்

கோடை வெயில் பாதிப்பை சமாளிக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு!

‘நகராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை பொதுமக்கள் 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும்’
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

