மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

காவலா் உதவி செயலி பயன்பாடு விழிப்புணா்வு

திருப்பத்தூா் அருகே அரசுப் பள்ளியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய சிறப்பு உதவி ஆய்வாளா் ரூபி.

Published On :29 அக்டோபர் 2026, 12:04 am IST

திருப்பத்தூா் அருகே அரசுப் பள்ளியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் ரூபி தலைமையில் சுந்தரம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திரளானோா் கலந்து கொண்டு பயனடைந்தனா். நிகழ்ச்சியில், போக்ஸோ சட்டம், காவலா் உதவி செயலியின் பயன்பாடு, சாலை பாதுகாப்பு விதிகள், பாதுகாப்பான வாகன ஓட்டம், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.